back to top
Homeவேலைவாய்ப்புதமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு தகவல் 2024

தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு தகவல் 2024

தமிழ் மொழியை பாட மொழியாக பயின்ற தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் மூலம் ஏராளமான காலியிடங்கள் உள்ளது. அதனால் இந்த பக்கத்தில் தமிழ் மொழியை பாட மொழியாக பயின்ற விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சில துறை சார்ந்த வேலைவாய்ப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிட்ட அரசு அமைப்புகளில் தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பதவிகளுக்கு தமிழ் மொழியை பாட மொழியாக படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 1:

  • தமிழ் மொழியை பாட மொழியாக படித்த தமிழக விண்ணப்பதாரருக்கு பல்வேறு வேலைகள் TNPSC Group 1 தேர்வில் அமைந்துள்ளது.
  • TNPSC Group 1 மூலம் வெளியாகும் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் போன்ற பதவிகள் மற்றும் பிற TNPSC Group 1 பதவிகளுக்கு தமிழ் மொழியை பாட மொழியாக பயின்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் TNPSC Group 1 குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • TNPSC Group 1 பதவிகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 45,000 முதல் அதிகபட்ச மாத ஊதியம் ரூபாய் 1,98,600 வரை வழங்கப்படும்.
  • குறைந்தபட்சமாக விண்ணப்பதாரருக்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 38 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வகுப்பு வாரியாக வயது தளர்வு TNPSC Group 1 பதவிகளுக்கு கொடுக்கப்படும்.
  • TNPSC Group 1 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்களை முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலமாக தேர்வு செய்வார்கள்.

TNPSC Group 2:

  • தமிழ் மொழியை பாட மொழியாக படித்த விண்ணப்பதாரர்களுக்கு TNPSC Group 2 தேர்வுகளில் ஏராளமான பதவிகள் அமைந்துள்ளது.
  • TNPSC Group 2 உள்ளஉதவி ஆய்வாளர், துணைப் பதிவாளர் போன்ற பதவிக்கு தமிழ் மொழியில் படித்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பில் நல்ல தேர்ச்சி விகிதத்தில் தேர்ச்சி அடைந்த நபர்களுக்கும்  TNPSC Group 2 தேர்வுகளில் ஏராளமான காலியிடம் உள்ளது.
  • TNPSC Group 2 தேர்வுகளில் உள்ள பதவிகளுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 40,000 மற்றும் அதிகபட்ச மாத ஊதியம் 1,50,000
  • TNPSC Group 2 பதவிக்கு 20 வயது முதல் 40 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • TNPSC Group 2 தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்வார்கள்.

TNPSC CCSE & 4:

  • TNPSC CCSE & 4 தேர்வுகளில் தமிழ் மொழியை பாட மொழியாக படித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • TNPSC CCSE மற்றும் குரூப் 4 தேர்வுகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், செயல் அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர் கிரேடு போன்ற பதவிகள் அமைந்துள்ளது. இந்த அனைத்து பதவிகளுக்கும் தமிழ் மொழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • TNPSC CCSE & 4 தேர்வுகளில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளில் பல்வேறு பதவிகள் அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற TNPSC CCSE & 4 பதவியை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.
  • TNPSC CCSE & 4 பதவிகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 24,000 முதல் அதிகபட்ச மாத ஊதியம் ரூபாய் 78,500 வரை வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 36 வயது வரை தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வகுப்பு வாரியாக TNPSC CCSE & 4 பதவிகளுக்கு வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC CCSE & 4 பதவிகளுக்கு, தகுதியான விண்ணப்பங்களை எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்வார்கள்.
All TNPSC Exam Official Notification

TNUSRB:

  • தமிழ்நாடு போலீஸ் துறையில் பணிபுரிய தமிழ் மொழியில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்புகள் அமைந்துள்ளது.
  • தமிழ்நாடு போலீஸ் அமைப்பின் சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ், ஜெயில் வார்டர், கான்ஸ்டபிள், ஃபயர்மேன் போன்ற பதவிகள் மற்றும் பிற பதவிகள் வருடம் தோறும் வெளியாகும். தமிழ்நாடு போலீஸ் அமைப்பின் மூலமாக வெளியாகும் இப் பதவிகளுக்கு தமிழ் மொழியை கல்வித் தகுதியாக கொண்ட நபர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
  • பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு போன்ற அனைத்து கல்வி தகுதிகளிலும் இதற்கான பதவிகள் தமிழ்நாடு போலீஸ் துறையில் அமைந்துள்ளது.
  • தமிழ்நாடு போலீஸ் துறையின் மூலம் வெளியாகும் பதவிகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 18,700 முதல் அதிகபட்சம் ரூபாய் 96,200 வரை வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 36 வயது வரை உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு போலீஸ் துறை பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வகுப்பு வாரியாக தமிழ்நாடு போலீஸ் பதவிகளுக்கு வயது தளர்வு கொடுக்கப்படும்.
  • எழுத்து தேர்வு, உடல் பரிசோதனை, மருத்துவ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக, உங்களை தமிழ்நாடு போலீஸ் துறை பதவிகளுக்கு தேர்வு செய்து, உங்களுக்கான பதவிகள் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொடுக்கப்படும்.
Official TNUSRB Post Notification Page

TNHRCE:

  • தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை நடத்தும் தேர்வுகளில், தமிழ் மொழியில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு முன்னுரிமைகள் கொடுக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இளநிலை மின் பொறியாளர், எழுத்தர், ஓதுவார், ஓட்டுநர் போன்ற பதவிகள் மற்றும் பிற பதவிகள் இடம்பெற்றுள்ளது. இப் பதவிகளுக்கு தமிழ் மொழியை பாட மொழியாக படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு போன்ற அனைத்து கல்வி தகுதி உள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் பல்வேறு காலிடங்கள் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறையில் அமைந்துள்ளது.
  • தமிழக ஹிந்து அறநிலையத்துறை மூலம் வெளியாகும் பெரும்பாலான பதவிகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய 15,000 கொடுக்கப்படும். அதிகபட்சமாக மாத ஊதியம் 58,400 வரை வழங்கப்படும்.
  • இந்து அறநிலையத்துறை மூலம் வெளியாகும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டாயம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 36 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Official TNHRCE Notification Page

TNEB:

  • தமிழ்நாடு மின்சாரத் துறையில் பூர்த்தி செய்ய வேண்டிய காலியிடங்கள் வெவ்வேறு கல்வி தகுதியில் அமைந்துள்ளது.
  • குறிப்பாக தமிழ்நாடு மின்சார துறையின் எலக்ட்ரீசியன், வயர்மேன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், சர்வேயர், டிராஃப்ட்ஸ்மேன் போன்ற பதவிகளுக்கு, குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் தமிழ் மொழியில் பயின்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து வகையான கல்வி தகுதி உள்ள நபர்களுக்கும், தமிழ்நாடு மின்சார துறையில் வேலை வாய்ப்பு காலியிடம் அமைந்துள்ளது.
  • குறைந்தபட்சம் ரூபாய் 14,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 1,20,000 வரை மாத ஊதியமாக தமிழ்நாடு மின்சார துறை வேலைகளுக்கு கொடுக்கப்படும். பதவிகள் மற்றும் கல்வித் தகுதியை பொறுத்து மாத ஊதியம் மாறுபடும்.
  • தமிழ்நாடு மின்சார துறை மூலமாக வெளியாகும் பெரும்பாலான வேலைகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இத்துறையில் பயிற்சி சார்ந்த வேலைகளும் அமைந்துள்ளது.
TNEB Official Recruitment Page

TN Aavin:

  • தமிழ்நாடு ஆவின் மூலம் கால்நடை ஆலோசகர், பால் விநியோகஸ்தர், மேற்பார்வையாளர், ஓட்டுநர் போன்ற வேலைகள் மற்றும் பிற வேலைகள் அமைந்துள்ளது.
  • பத்தாம் வகுப்பு கல்வி தகுதி முதல் ஆவின் அமைப்பு குறிப்பிட்ட பட்டப்படிப்பு கல்வி தகுதி வரை அனைத்து வகையான கல்வி தகுதி உள்ள நபர்களுக்கும், ஆவின் துறையில் வேலைவாய்ப்பு காலியிடம் அமைந்துள்ளது.
  • மாத ஊதியம் குறைந்தபட்சமாக ரூபாய் 17,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 55,000 வரை தமிழ்நாடு ஆவின் பதவிகளுக்கு வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 36 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தமிழ்நாடு ஆவின் அமைப்பின் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Aavin Official Career Page

TNSTC:

  • தமிழ் மொழியில் பள்ளி படிப்பு மற்றும் தமிழ் மொழியில் கல்லூரி படிப்பு படித்த நபர்களுக்கு, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் ஏராளமான தற்காலிக, நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் ஆன அரசு வேலைவாய்ப்புகள் உள்ளது.
  • தமிழ்நாடு போக்குவரத்து துறையில் அப்ரண்டிஸ், ஃபிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், டிரைவர், கண்டக்டர் போன்ற பதவிகள் மற்றும் பிற பதவிகள் அமைந்துள்ளது.
  • எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு போன்ற அனைத்து கல்வி தகுதியில் உள்ள நபர்களுக்கும், தமிழக போக்குவரத்து துறையில் பதவிகள் உள்ளன.
  • தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள பதவிகளுக்கு மாத ஊதியம் 16,000 முதல் 75,000 வரை, நீங்கள் தேர்வு செய்யும் பதவிகளை பொறுத்து வழங்கப்படும்.
  • வயது வரம்பு தமிழக போக்குவரத்து துறை பதவிகளை கொடுத்து மாறுபடும். பயிற்சி சார்ந்த பதவிகள் என்றால் அதற்கான வயது வரம்பும், நிரந்தர அடிப்படையிலான பதவிகள் என்றால் அதற்கான வயது வரம்பும் மாறுபடும்.
TNSTC Official Notification Page

தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பதவிகளுக்கு அப்ளை செய்வது எப்படி:

TNPSC Group 1,2 & 4:

TNPSC Group 1,2 & 4 போன்ற அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC அமைப்பின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை பெற்று, விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

TNUSRB:

தமிழ்நாடு போலீஸ் துறையின் மூலம் வெளியாகும் அனைத்து பதவிகளுக்கும் உங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

www.tnusrb.tn.gov.in என்ற இணையம் மூலம் தமிழ்நாடு போலீஸ் துறையின் புதிய வேலைக்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொண்டு, விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

TNHRCE:

தமிழ்நாடு இந்து அறநிலைய துறை வேலைகளுக்கு ஆன்லைன் வாயிலாகவும் அல்லது ஆஃப்லைன் வாயிலாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டால், தமிழ்நாடு இந்து அறநிலைய துறை விண்ணப்ப படிவத்தை hrce.tn.gov.in என்ற இணைய பக்கத்தின் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

தபால் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டால், ஹிந்து அறநிலையத்துறை குறிப்பிட்ட தபால் முகவரிக்கு, குறிப்பிட்ட விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும்.

TNEB:

தமிழ்நாடு மின்சார துறை மூலம் வெளியாகும் பெரும்பாலான வேலைகளுக்கு ஆன்லைன் மூலமாகவே உங்களது விண்ணப்பம் வரவேற்கப்படும்.

www.tangedco.org என்ற இணையம் மூலமாக தமிழ்நாடு மின்சார துறை வேலைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

TN Aavin:

தமிழ்நாடு ஆவின் அமைப்பின் சில வேலைகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். சில வேலைகளுக்கு ஆப்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

aavin.tn.gov.in என்ற தமிழ்நாடு ஆவின் அமைப்பின் இணையம் மூலம் புதிய ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தமிழ்நாடு ஆவின் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அல்லது தமிழ்நாடு ஆவின் அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரிக்கு, குறிப்பிட்ட விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், உங்களது ஆவின் வேலைக்கான விண்ணப்பத்தை தபால் மூலமாக அனுப்பி விட வேண்டும்.

TNSTC:

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் புதிய வேலைகளுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க குறிப்பிட்டு இருந்தால், தமிழ்நாடு போக்குவரத்து துறை குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியாக அனுப்பி விட வேண்டும்.

தமிழ்நாடு போக்குவரத்து துறை, ஆன்லைன் மூலமாக உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய குறிப்பிட்டிருந்தால், www.tnstc.in என்ற இணையம் மூலம் TNSTC விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular