டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ் பற்றிய முக்கிய அறிவிப்பு

  • Post last modified:November 13, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ் 2022 – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான  சிலபஸ் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை பொருத்தவரை மொத்தமாக 200 கேள்விகள் கொடுக்கப்படும். அதில் 100 கேள்விகள் தமிழ் மொழியை சார்ந்த கேள்விகள் ஆகும். 75 கேள்விகள் பொது அறிவு பாடத்திட்டங்களை சார்ந்த கேள்விகள் ஆகும். அதேபோல் 25 கேள்விகள் திறனறிவு தேர்வு கேள்விகளாகும். இதில் மொத்தமாக 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் வழங்கப்படும். அதில் ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பு வழங்கப்படும். அதன்படி கீழே அதற்கான சில விவரங்கள் கீழே உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ்

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ் முழு விவரங்கள் 2022

பாடத்திட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் நபர்கள் முக்கியமாக இங்கே குறிப்பிட்ட பாடத்திட்டங்களை கட்டாயமாக படிக்கவேண்டும். அதில் தமிழ் மொழி பாடப்பிரிவு முக்கியமாகும். அதேபோல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் போன்றவை மிக முக்கியமானதாகும். இதிலிருந்து அதிகப்படியான கேள்விகள் கொடுக்கப்படும்.

தமிழ் பாடப்பிரிவு

தமிழ் பாடப் பிரிவுகளில் மிக முக்கியமாக தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் கொள்ளும் மற்றும் தமிழ் உரைநடைகள் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இருந்து அதிகப்படியான வினா விடைகள் வெளியாகும். முக்கியமாக தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியங்களைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் மற்றும் தெளிவான கருத்துக்களை தெரிந்திருக்கவேண்டும். இதன்படி நீங்கள் செயல்பட்டால் கட்டாயம் தமிழ் பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண் எடுக்கலாம்

அறிவியல்

தாவரவியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற அறிவியல் பாடங்களில் உள்ள முக்கியமான வினாக்களை தெரிந்து கொண்டு அதன்படி குரூப் 4 தேர்வு தேர்வுக்கு தயாராகுங்கள். இந்த தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியல் சார்ந்த கேள்விகளை நீங்கள் ஆறாம் வகுப்பு பாட புத்தகம் முதல் பத்தாம் வகுப்பு பாடபுத்தகம் வரை தெரிந்துகொள்ளலாம். இதில் இருந்து அதிகப்படியான வினாக்கள் வெளியாகும்

நடப்பு நிகழ்வுகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு முக்கியமாக நடப்பு நிகழ்வுகள் தெரிந்திருப்பது அவசியம். அதில் வரலாறு, அரசியல், அறிவியல், புவியியல், பொருளாதாரம் போன்ற துறை சார்ந்த நடப்பு நிகழ்வுகள் மாநில வாரியாகவும் அல்லது மாவட்ட வாரியாக உள்ளது தேசியம் வாரியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ்தெரிந்திருப்பது மிக முக்கியமானதாகும்.

புவியியல்

புவியல் பாடப்பிரிவில் கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள், புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண் போன்ற பாடப்பிரிவுகள் தெரிந்திருந்தால் நல்லது. இதிலிருந்து சில வினாக்கள் புவியியல் பாடப் பிரிவில் இருந்து டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் கேட்கப்படும்.

வரலாறு

வரலாறு பாடப் பிரிவில் இருந்து சிந்து சமவெளி நாகரிகம், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர குப்தர்கள், டில்லி சுல்தான், மற்றும் பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில.போன்ற பாடப் பிரிவில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதன்படி நீங்கள் ஆறாம் வகுப்பு புத்தகம் முதல் பத்தாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள வரலாறு சார்ந்த இந்தப் பாடப்பிரிவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியா அரசியல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இந்திய அரசியல் பாடப் பிரிவில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். அதன்படி அரசியலமைப்பு, முகவுரை, குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், , பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் போன்ற இந்திய அரசியல் சார்ந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ் தகவல்களை தெரிந்து கொண்டு டிஎன்பிசி குரூப் 4 தேர்வு களில் பயன்படுத்தவும்.

பொருளாதாரம்

பொருளாதாரம் மூலமாக ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி கொண்ட வினாவிடைகள் டிஎன்பிசி குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் அதன்படி பொருளாதார சார்ந்த கேள்விகளை தெரிந்துகொள்வதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொருளாதார பாடப்பிரிவை சரியாக படிக்கவும்.

இந்தியா தேசிய இயக்கம்

இந்தியா தேசிய இயக்கின் மூலமாக மிக முக்கியமான கேள்வி கேட்கப்படும். அதனால் தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு,ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் தாகூர், மற்றும் பல தலைவர்களின் பங்கு மற்றும் சில.போன்ற இந்திய தேசிய இயக்க பற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ் தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

திறனறி வினாக்கள்

திறனறி பிரிவிலிருந்து 25 வினாக்களும் கேட்கப்படும். அதனால் திறனறிவு கேள்விகளை  சரியாக தெரிந்து கொண்டு அதன்படி டிஎன்பிசி குரூப் 4 தேர்வு சரியான பதில் அளிக்கவும். திறனறிவு பகுதியில் தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages),சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), எண்ணியல் (Number System), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry),போன்ற பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அதற்கு மிக முக்கியமானதாகும். அதனால் இதனை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் சிலபஸ் பற்றிய தகவல் அனைத்தையும் தெரிந்து கொண்டோம். இதை தவிர மற்ற பாடங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில்  வெளியாகாது. அதனால் மேலே கொடுக்கப்பட்டுள்ள சிலபஸ் களை சரியான முறையை தெரிந்து கொண்டு பின்பு குரூப்-4 தேர்வை எழுதுங்கள்.