back to top
Homeவேலைவாய்ப்புதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2024 - அலுவலக உதவியாளர், பதிவாளர், ஜீப் டிரைவர்...

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2024 – அலுவலக உதவியாளர், பதிவாளர், ஜீப் டிரைவர் வேலைகள்

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் அலுவலக உதவியாளர், பதிவாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்ட் கிளார்க், இரவு காவலாளி போன்ற பதவிகள் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் முந்தைய வருட ஊரக வளர்ச்சித் துறையின் அறிக்கையின் படி தெரிந்து கொள்ளப்பட்டு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வருட ஊரக வளர்ச்சித் துறையின் வேலை வாய்ப்பு காலியிடங்கள் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர்:

  • தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும்.
  • ரூபாய் 15,700 முதல் 50,000 வரை அலுவலக உதவியாளர் பதவிக்கு மாத ஊதியம் வழங்கப்படும்.
  • கட்டாயம் அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள்.

பதிவாளர்:

  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த நபர்கள் பதிவாளர் வேலைக்கு தகுதி உடையவர்கள்.
  • ரூபாய் 15,900 முதல் ரூபாய் 50,400 வரை மாத ஊதியமாக தமிழக ஊராட்சி வளர்ச்சி துறையின் பதிவாளர் பதவிக்கு வழங்கப்படும்.
  • தமிழக பதிவாளர் பதவிக்கு கட்டாயம் 18 வயது நிரம்பிருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை உள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஜீப் டிரைவர்:

  • எட்டாம் வகுப்பு கல்வி தகுதியில் தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் துறையில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும்.
  • ஊரக வளர்ச்சித் துறையின் ஜீப் டிரைவர் பதவிக்கு மாத ஊதியமாக ரூபாய் 19,500 முதல் ரூபாய் 71,900 வரை வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 37 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இதற்கு அப்ளை செய்யலாம்.

ரெக்கார்ட் கிளார்க்:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • ரூபாய் 15,700 முதல் 58,100 வரை மாத ஊதியமாக ஊரக வளர்ச்சித் துறையின் ரெக்கார்ட் கிளார்க் பதவிக்கு வழங்கப்படும்.
  • குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருத்தல் வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இரவு காவலாளி:

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த நபர்கள் இரவு காவலர் பதவிக்கு தகுதியுடையவர்கள்.
  • இரவு காவலாளி வேலைக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் நல்லது. மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
  • ஊரக வளர்ச்சித் துறையின் இரவு காவலாளி பதவிக்கு ரூபாய் 15,700 முதல் ரூபாய் 50,000 வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • 18 வயது முதல் 37 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இரவு காவலாளி பதவிக்கு தகுதி உடையவர்கள்.

வயது தளர்வு:

  • OBC வகுப்பினர்  – 3 ஆண்டுகள்
  • SC/ ST வகுப்பினர் – 5 ஆண்டுகள்
  • PWD வகுப்பினர் – 10 ஆண்டுகள்

நபர்கள்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வெளியாகும் அரசு வேலைகளுக்கு www.tnrd.tn.gov.in என்ற ஊரக வளர்ச்சி துறையின் இணைய பக்கத்தின் மூலமாக வேலை வாய்ப்பு விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, தமிழ்நாட்டின் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் உங்களுக்கேற்ற பதவிகளை தேர்வு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வெளியாகும் எந்த விதமான அரசு வேலைகளுக்கும், எந்த விதமான விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு முறை:

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வெளியாகும் பெரும்பாலான அரசு வேலைகளுக்கு உங்களை நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரி சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, உங்களுக்கான பதவிகள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் வழங்கப்படும்.

  • நேர்முக தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு எப்படி அப்ளை செய்வது:

  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைகளுக்கு உங்களது விண்ணப்ப படிவத்தை ஆஃப்லைன் மூலமாக பூர்த்தி செய்து, குறிப்பிட்டு தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகிறதோ, அந்த மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், குறிப்பிட்ட மாவட்டத்தின் இணைய பக்கத்தின் மூலமாக பெற்றுக் கொண்ட பிறகு, அதனை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • முக்கியமாக, விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள உங்களின் பெயர், உங்கள் தந்தை பெயர், கல்வி தகுதி, வயது வரம்பு, மதிப்பெண் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • சரியான முறையில் உங்களது ஊரக வளர்ச்சி துறை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, உங்களது விண்ணப்ப படிவத்தை, உங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை குறிப்பிட்ட தபால் முகவரிக்கு, விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விட வேண்டும்.
  • பிறகு, உங்கள் ஊரக வளர்ச்சி துறை வேலைக்கான விண்ணப்ப படிவம் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைக்கான நேர்முகத் தேர்வு அழைப்பு விடப்படும்.
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைக்கான விண்ணப்ப தேதி விவரங்கள், அந்தந்த ஊரக வளர்ச்சித் துறை மாவட்டங்களை பொறுத்து மாறுபடும். அதனால் உங்கள் மாவட்டங்களில் வெளியாகும் ஊரக வளர்ச்சி துறை வேலைகளை,  உங்கள் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலமாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
TNRD Official Website
TN Govt Job Opportunity
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular