back to top
Homeவேலைவாய்ப்புதமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024 - அமைப்பாளர், சமையலர், உதவியாளர் வேலைகள்

தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024 – அமைப்பாளர், சமையலர், உதவியாளர் வேலைகள்

தமிழ்நாடு சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் போன்ற வேலைகளை நாம் பார்க்க இருக்கிறோம். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது நிரந்தர அடிப்படையிலோ சில சத்துணவு மைய வேலைகள் அவ்வப்பொழுது வெளியாகும். அதன் காரணமாக இந்த பக்கத்தில் சத்துணவு துறை வேலைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் தகுதியான நபர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர்:

  • பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழக சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூபாய் 7,500 முதல் 24,200 வரை மாத ஊதியம் மற்றும் பிறபடிகள் வழங்கப்படும்.
  • 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 40 வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்.
  • விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 20 வயது முதல் 40 வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்.
  • உங்களுக்கு அருகில் உள்ள சத்துணவு மைய வேலைகளுக்கு மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு 4% சதவீதம் ஒதுக்கீடு அனுமதிக்கப்படும்.

சத்துணவு சமையலர்:

  • சத்துணவு சமையலர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
  • சத்துணவு சமையலர் பணிக்கு ரூபாய் 4,100 முதல் 12,500 வரை மாத ஊதியம் மற்றும் பிறப்படிகள் வழங்கப்படும்.
  • சத்துணவு சமையலர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயது வரை சத்துணவு சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சமையல் உதவியாளர்:

  • சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு ரூபாய் 3,000 முதல் ரூபாய் 9,000 வரை மாத ஊதியம் மற்றும் பிறபடிகள் வழங்கப்படும்.
  • பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
  • விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயதிற்குள் சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நபர்கள்:

தமிழ்நாடு சத்துணவுத்துறை வேலைகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

தமிழ்நாடு சத்துணவு துறை வேலைகளுக்கு எந்த விதமான விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேரடி முறையில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

எளிய நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான பெண்களை தேர்வு செய்து, உங்கள் பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களில் உங்களுக்கான சத்துணவு மைய பதவிகள் ஒதுக்கப்படும்.

  • நேர்முக தேர்வு

தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது:

  • இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக சத்துணவு துறை வேலை வாய்ப்பு தகவல்கள் அனைத்தும், முந்தைய வருட சத்துணவு மைய வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமே.
  • இந்த வருடத்திற்கான தமிழக சத்துணவு துறை வேலைகளுக்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • உங்கள் மாவட்ட சத்துணவு துறை வேலைக்கான அதிகாரபூர்வ  அறிக்கை வெளியாகிய  உடன், உங்கள் மாவட்ட அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலமாக விண்ணப்பத்தை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்.
  • தமிழக சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்த பிறகு, அதனை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஜெராக்ஸ் எடுத்துக் கொண்ட உங்களது சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்ப படிவத்தை, அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியாகவும் உண்மையாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்த உங்களது தமிழக சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்ப படிவத்தை, குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விட வேண்டும்.
  • பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும், தமிழ்நாடு சத்துணவு துறை மூலமாக நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடப்படும்.
  • நேர்முகத் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள சத்துணவு மையங்கள் மூலமாக வேலைகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு சத்துணவு துறை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய விவரங்கள்:

சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் போன்ற வேலைகளுக்கு, உங்கள் சத்துணவு துறை விண்ணப்ப படிவத்தில் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்கள்.

  • உங்களின் பெயர்
  • தகப்பனார் பெயர் அல்லது கணவர் பெயர்
  • இருப்பிட முழு முகவரி ( அஞ்சல் என்னுடன் )
  • விண்ணப்பிக்கும் பணி
  • பிறந்த தேதி விவரம்
  • கல்வி தகுதி
  • பணியிடம் கோரும் பள்ளியின் பெயர்
  • விண்ணப்ப தாரரின் இருப்பிடத்திற்கும் விண்ணப்பிக்கும் பள்ளிக்கும் உள்ள தூரம்
  • ஒதுக்கீட்டு விவரம், ஜாதி மற்றும் உட்பிரிவு
  • இருப்பிடத்திற்கான ஆதாரம்
  • ஊனமுற்றோர் விவரம் ( ஆம் அல்லது இல்லை )
  • மனுதாரர் ஆதரவற்ற விதவையா அல்லது கணவரால் கைவிடப்பட்டவரா மற்றும் பிற குறிப்பு தகவல்.

தமிழ்நாடு சத்துணவு துறை விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய நகல்கள்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகல்களை தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்கும் பொழுது, உங்களது விண்ணப்ப படிவத்துடன் இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விட வேண்டும்.

  • பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்
  • கல்வித் தகுதி சான்று நகல்
  • மதிப்பெண் சான்றிதழ் நகல்
  • ஜாதி சான்று நகல்
  • ஆதார் அட்டை நகல்
  • விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து தரப்பட்ட சான்றிதழ் நகல்
  • மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்
Previous Year Sathunavu Thurai Notice
Previous Year Notification & Application
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular