தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் பற்றிய புதிய தகவல்

  • Post last modified:November 13, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் தகவல் 2022 – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு தேர்வு ஆகும். இந்த தேர்வு மூலமாக பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் வெளியாகும். இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக பல்வேறு இடங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு ஆவார்கள். அதன்படி கீழே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான முக்கிய தகவல் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தெளிவாக தெரிந்து கொண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக தயாராகுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் பற்றிய தகவல் 2022

அமைப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மட்டுமின்றி பல்வேறு விதமான அரசு வேலைவாய்ப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பின் மூலமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டம் முழுக்க குரூப்-4 தேர்வுக்கான காலியிடம் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு இரண்டு முறை வெளியாகும்.

காலியிடம்

தமிழ்நாடு முழுக்க வருடம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்காக நமது தமிழ்நாட்டில் வெளியாகும். அந்தந்த வருடத்தில் பல்வேறு காலியிடங்கள் வெளியாகி சரியாக எழுதி தேர்வு நடைபெற்று காலியிடங்கள் நிரப்பப்படும். அதன்படி வரவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு அதிகபட்சமாக 3500 காலியிடங்கள் எதிர்பார்க்கலாம்.

கல்வி தகுதி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தாலே போதுமானது. மேலும் பத்தாம் வகுப்பிற்கு மேல் நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்திருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் தேர்வு இருக்கு உங்களுக்கு கட்டாயம் 18 வயது  இருக்க வேண்டும். அதேபோல் 35 வயது வரை இருக்க வேண்டும். 35 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அந்தந்த வகுப்பினருக்கு ஏற்றது போல் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் உங்கள் வகுப்பு வாரியான வயது தளர்வை தெரிந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அப்ளை முறை

பெரும்பாலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நீங்கள் கட்டாயம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். டிஎன்பிசி குரூப் தேர்வு வெளியான பிறகு நீங்கள் என்ற இணையம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நபர்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தகுதி உடையவர்கள் உங்கள் மாவட்டத்திலே நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பிறகு உங்களுக்கான வேலைகளை உங்கள் மாவட்டத்தில் அல்லது உங்கள் மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வழங்கப்படலாம்.

முக்கிய தேதிகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முக்கிய தேதி விபரங்கள் அனைத்தும் என்ற இணையம் மூலமாக நீங்கள் முதல் கட்டமாக தெரிந்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முக்கியமாக விண்ணப்ப தேதி, ஹால் டிக்கெட் வெளியீடு, தேதி எழுத்துத் தேர்வு தேதி போன்றவை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை நீங்கள் என்ற இணையம் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முறை

தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உங்களை எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். அதன்படி நீங்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்த பிறகு உங்கள் வகுப்பு வாரியாக கட்ஆப் சரிபார்க்கப்பட்டு, பிறகு உங்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்படும்.

பிற தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம் கான முக்கியமான தகவல்களை நீங்கள் அவர்களது அதிகாரப்பூர்வ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை நமது இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதற்கான முக்கிய தகவல்களை உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால் என்ற இணையம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

TNPSC Group 4 Official Details Link