தமிழ்நாடு போக்குவரத்து துறை நடத்தும் ஓட்டுநர் தேர்வுக்கான முக்கிய தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை சார்ந்த தகவல்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் தோறும் உள்ள தகுதியான நபர்களுக்காக இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் ஓட்டுநர் பதவிகள் வருடத்தில் ஒரு முறையாவது வெளியாவது வழக்கம். அதன் காரணமாக ஓட்டுநர் சம்பந்தப்பட்ட தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஓட்டுநர் பதவி:
- தமிழ் எழுத்த, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
- செல்லுபடியாகும் கனரக போக்குவரத்து ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 18 மாத ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் – ரூ. 15,000 – 65,200/- ஊதிய விகிதம் & பிற ஊதியம் வழங்கப்படும்.
- குறைந்தபட்சமாக 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்சமாக 40 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- தமிழக போக்குவரத்து துறை ஓட்டுநர் வேலைகளுக்கு வகுப்பு வாரியாக வயது தளர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.
நபர்கள்:
தமிழக போக்குவரத்து துறையின் மூலம் வெளியாகும் பெரும்பாலான ஓட்டுநர் வேலைகளுக்கு தமிழ்நாட்டின் தகுதியான ஆண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு சில மாவட்ட ஓட்டுனர் வேலைகளுக்கு பெண்களுக்கும் காலியிடங்கள் வெளியாகிறது.
விண்ணப்ப கட்டணம்:
தமிழக போக்குவரத்து துறை ஓட்டுநர் வேலைக்கான விண்ணப்ப கட்டணம் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.
தேர்வு முறை:
தமிழக போக்குவரத்து துறையின் ஓட்டுநர் வேலைகளுக்கு உங்களை நடைமுறை தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, உங்களுக்கான தமிழக அரசு ஓட்டுநர் வேலைகள் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொடுக்கப்படும்.
- நடைமுறை தேர்வு
- நேர்முக தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழக அரசு துறைகளில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது:
- தமிழக போக்குவரத்து துறையின் கீழ் வெளியாகும் பெரும்பாலான ஓட்டுனர் பதவிகளுக்கு நீங்கள் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க நேரிடும்.
- அதனால், தமிழ்நாடு போக்குவரத்து துறை ஓட்டுநர் வேலைக்கான விண்ணப்ப படிவத்தை www.tnstc.in என்ற இணைய பக்கத்தின் மூலமாக வெளியாகிய உடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
- மேலும், இந்த வருடத்திற்கான தமிழ்நாடு போக்குவரத்து துறை ஓட்டுனர் வேலைக்கான அதிகாரபூர்வ விண்ணப்பம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- போக்குவரத்து துறை வேலைக்கான விண்ணப்ப படிவம் வெளியாகியவுடன் அதனை டவுன்லோட் செய்து, உங்களது விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஜெராக்ஸ் எடுத்துக்கொண்ட உங்களது போக்குவரத்து துறை ஓட்டுனர் விண்ணப்ப படிவத்தை, அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் படி பூர்த்தி செய்ய வேண்டும்.
- போக்குவரத்து துறை ஓட்டுனர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்ட உங்களின் பெயர், தந்தையின் பெயர், கல்வித் தகுதி, மதிப்பெண் விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- தமிழ்நாடு போக்குவரத்து துறை குறிப்பிட்ட சான்றிதழ் நகல்களை, உங்களது ஓட்டுநர் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து, குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- தமிழ்நாடு போக்குவரத்து துறை ஓட்டுநர் வேலைக்கான விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்யாமலோ அல்லது சரியான சான்றிதழ்களை இணைக்கவில்லை என்றாலோ, உங்களது விண்ணப்பம் தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாக நிராகரிக்கப்படும்.
- மிக முக்கியமாக, தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலம் அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் வெளியாகிய உடன் மட்டுமே, இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக போக்குவரத்து துறை ஓட்டுனர் வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் முந்தைய வருட ஓட்டுநர் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமே. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் கூடிய விரைவில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ வெளியாகலாம்.
New TNSTC Notification Soon |
Official TNSTC Website Page |