back to top
Homeவேலைவாய்ப்புதமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பு தகவல் 2024

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பு தகவல் 2024

தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம், தமிழக பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் இதர தமிழ்நாடு அரசு அமைப்புகளில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பல்வேறு காலியிடங்கள் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அமைப்புகளில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற அனைத்து கல்வி தகுதிகளிலும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு காலியிடங்கள் உள்ளது.

TNPSC Department:

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் பல்வேறு காலியிடங்கள் அமைந்துள்ளது.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு போன்ற கல்வி தகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி நபர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் பல்வேறு வேலைகள் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியாகும் மாற்றுத்திறனாளிகளுக்கான பதவிகளுக்கு, நீங்கள் தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சி பதவிகளை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பதவிகளுக்கு 18 வயது முதல் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பதவிகளுக்கு பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கீழே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான TNPSC வேலைகளை தகுதியான நபர்கள் தெரிந்து கொண்டு குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கவும்.

TNPSC Official Notification Page

TN TRB Department:

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அடுத்தபடியாக, தகுதியான மாற்றுத்திறனாளிகள் அதிகம் விண்ணப்பிக்கும் அமைப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணைய (TN TRB) பதவிகள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் தகுதியான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற நபர்களுக்கு வருடம் தோறும் ஆசிரியர் துறை சார்ந்த காலியிடங்களை தெரிவித்து வருகிறது.

இளங்கலை கல்வி, முதுகலை கல்வி, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் துறை சார்ந்த பிற படிப்புகள் படித்த மாற்றுத் திறனாளி நபர்களுக்கு பல்வேறு காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைப்பில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் மாற்றுத்திறனாளி பதவிகளுக்கு தோராயமாக 22,100 முதல் 85,000 வரை மாத ஊதியம் மற்றும் பிறபடிகள்  கொடுக்கப்படலாம்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் வெளியாகும் மாற்றுத்திறனாளி வேலைகளுக்கு குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 40 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கூடிய தமிழக ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் பதவிகளுக்கு trb.tn.gov.in என்ற இணைய பக்கத்தின் மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க நேரிடும்.

கீழே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தின் மூலமாக புதிதாக வெளியாகும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் (TN TRB) அமைப்பின் மாற்றுத்திறனாளிகளின்  வேலைகளை தெரிந்து கொண்டு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவும்.

TN TRB Official Notification Page

TN Govt University:

தமிழ்நாட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பதவிகள் அமைந்துள்ளது.

பெரும்பாலும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் சில குறிப்பிட்ட படிப்புகள் படித்த நபர்களுக்கு தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு காலியிடம்  அமைந்துள்ளது.

தமிழக பல்கலைக்கழகம் மூலமாக ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது நிரந்தர அடிப்படையிலோ வேலைவாய்ப்பு காலியிடம் வெளியாகும். அதனை அதற்கான அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிந்து கொள்ள வேண்டும்.

தோராயமாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கூடிய தமிழக பல்கலைக்கழக வேலைகளுக்கு மாத ஊதியம் ரூபாய் 15,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 65,000 வரை வழங்கப்படலாம்.

தமிழக பல்கலைக்கழகத்தின் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை பல்கலைக்கழகங்களை பொறுத்து மாறுபடும். சில பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலமாகவும், சில பல்கலைக்கழகங்கள் ஆஃப்லைன் மூலமாகவும் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

கீழே மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடிய சில தமிழக பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணைய பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக புத்தம் புதிய பல்கலைக்கழகத்தின் வேலைகளை தெரிந்து கொண்டு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவும்.

TNAU Official Job Opportunities
Anna University Recruitment Page
Bharathiar University Recruitment
Bharathidasan University Notification

Public Sector Bank Department:

எஸ்பிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா போன்ற அரசு வங்கிகளில் தகுதியான மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பல்வேறு பதவிகள் அமைந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு காலியிடம் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடிய பொதுத்துறை வங்கிகளின் பதவிகளுக்கு மாத ஊதியம் தோராயமாக 18,500 முதல் 60,000 வரை வழங்கப்படலாம். நீங்கள் தேர்வு செய்யும் பொதுத்துறை வங்கிகளின் பதவிகளை பொறுத்து மாத ஊதியம் மாறுபடும்.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கூடிய பொதுத்துறை வங்கிகளின் வேலைகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 38 வயது வரை உள்ள தகுதியான மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை வங்கிகளின் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கீழே சில பொதுத்துறை வங்கிகளின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு  பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடிய பொதுத்துறை வங்கிகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

SBI Bank Current Openings
IOB Official Career Page
Indian Bank Official Career Page
BOB Bank Current Opportunity
Canara Bank Recruitment Page

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய விவரம்:

மாற்றுத்திறனாளி நபர்கள் உங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பொழுது, குறிப்பிட்ட அமைப்புகள் எந்தெந்த சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்களோ, அந்த சான்றிதழ் நகல்களை இணைத்து, உங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக அனுப்பி விட வேண்டும்.

  • சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
  • வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட உங்களது கையொப்பம் நகல்.
  • ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் நகல்
  • குறிப்பிட்ட பதவிக்கான மதிப்பெண் சான்றிதழ் நகல்.
  • ஜாதி சான்றிதழ் நகல் வகுப்பு வாரியாக.
  • மாற்றுத்திறனாளி அடையாளத்திற்கான சான்றிதழ் நகல்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular