back to top
Homeவேலைவாய்ப்புதமிழ்நாடு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 - TNHRCE Aranilaya Thurai Jobs

தமிழ்நாடு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 – TNHRCE Aranilaya Thurai Jobs

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை (TNHRCE) மூலமாக முந்தைய வருடங்களில் தெரிவிக்கப்பட்ட டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், திருவழகு, மேற்பார்வையாளர், ஓட்டுநர், பம்ப் ஆபரேட்டர், உதவி எலக்ட்ரீசியன், கணினி இயக்குபவர் போன்ற பதவிகள் மற்றும் பிற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறையின் புதிய வேலைவாய்ப்பு அறிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவங்கள் hrce.tn.gov.in என்ற இணையம் மூலம் தெரிவிக்கப்படும்.

டிக்கெட் விற்பனை எழுத்தர்:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • மாத ஊதியம் நிலை 22 – யின் படி ரூபாய் 18,500 முதல் 58, 600 வரை வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்கள் டிக்கெட் விற்பனை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர்:

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசு அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாத ஊதியம் நிலை 17 – யின் படி ரூபாய் 15,900 முதல் 50,400 வரை வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்கள் இந்து அறநிலையத்துறை அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

காவலர்:

  • தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மாத ஊதியம் நிலை 17 – யின் படி ரூபாய் 15,900 முதல் 50,400 வரை வழங்கப்படும்.
  • இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்கள் 18 வயது முதல் 45 வயது வரை காவலர் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவலகு:

  • திருவலகு பதவிக்கு கட்டாயம் தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மாத ஊதியம் நிலை 17 – யின் படி ரூபாய் 15, 900 முதல் 50,400 வரை வழங்கப்படும்.
  • 18 வயது கட்டாயம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 45 வயது வரை இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விடுதி காப்பாளர்:

  • விண்ணப்பதாரர் கட்டாயம் தமிழ் மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மாத ஊதியம் நிலை 17 – யின் படி ரூபாய் 15,900 முதல் 50,400 வரை மாதம் தோறும் வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் இப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பலவேலை:

  • தமிழ்நாடு இந்து அறநிலைய துறை பலவேலை பதவிக்கு தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மாத ஊதியம் நிலை 16 – இன் படி ரூபாய் 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரருக்கு கட்டாயம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 45 வயதிற்குள் மட்டுமே இருத்தல் அவசியம்.

ஓட்டுநர்:

  • எட்டாம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அறநிலையத்துறை ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுனர் பதவிக்கு மாத ஊதியம் நிலை 22 – யின் படி ரூ.18,500 முதல் 58,600 வரை வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள இந்து மதத்தை சார்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளம்பர் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் அல்லது தொழில் பாட பிரிவில் வழங்கப்படும் தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மற்றும் தொடர்புடைய பிரிவில் 5 வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பிளம்பர் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பதவிக்கு மாத ஊதியம் நிலை 19 – இன் படி 18,000 முதல் 56,900 வரை மாதம் தோறும் வழங்கப்படும்.
  • இப்பதவிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மின் உதவியாளர்:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் மின் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H – சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மீன் உதவியாளர் பதவிக்கு மாத ஊதியம் நிலை 18 – யின் படி 16,600 முதல் 52,400 வரை வழங்கப்படும்.
  • 18 வயது முதல் 45 வயது வரை உள்ள தகுதியான நபர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

மினி பஸ் கிளீனர்:

  • எட்டாம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் உத்தி பற்றி நன்கறிந்த நபர்களுக்கு மினி பஸ் கிளீனர் பதவிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மாத ஊதியம் நிலை 16 – யின் படி 15,700 முதல் 50,000 வரை மாதம் தோறும் வழங்கப்படும்.
  • இந்து மதத்தை சார்ந்த 18 வயது முதல் 45 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை & நிபந்தனைகள்

  • இந்து அறநிலையத்துறை விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தின் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
  • அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய் 100 செலுத்தி இந்து அறநிலையத்துறை விண்ணப்பத்தினை குறிப்பிட்ட அலுவலக நாட்களில், அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளவும்.
  • 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்கள் மட்டுமே இந்து அறநிலையத்துறை பதவிகளுக்கு ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக பெற்றுக்கொண்ட உங்களது இந்து அறநிலையத்துறை விண்ணப்ப படிவத்தினை சரியான முறையில் பூர்த்தி செய்து, குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பம் வெளியாகிய தேதி முதல் விண்ணப்பம் முடியும் தேதிக்குள், தபால் மூலமாகவோ அல்லது நேரடியாக சென்று சமர்ப்பிக்கும் நபர்களின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
  • விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் கூடுதல் கல்வி தகுதிக்கான சான்றிதழ், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் ( Attested Xerox copy only ) பெற்று அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் நகல், விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான பெயரை குறிப்பிட்டு, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்ட விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யாமல், கேட்கப்பட்டுள்ள சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடும் கல்வித் தகுதி மற்றும் பிற கல்வி தகுதி கூறிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள், நேர்முகத் தேர்வின் போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
Previous Aranilaya Thurai Jobs Notification
TNHRCE Official Notification Page
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular